வணிகம்

2017ல் ikman.lk உறுதியான வளர்ச்சியை பதிவு

(UTV|COLOMBO)-இலங்கையின் மாபெரும் ஒன்லைன் சந்தைப்பகுதியான ikman.lk  2017ம் ஆண்டில் உறுதியான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. நிறுவனத்தினால் அண்மையில் வெளியிடப்பட்டிருந்த புள்ளி விவரங்களின் பிரகாரம் இந்த வளர்ச்சி பதிவாகியுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டில் பெருமளவு இணைய சந்தைப் பங்கை ikman.lkபதிவு செய்திருந்ததுடன், 2017 நவம்பர் மாதத்தில் மாத்திரம் பதிவாகியிருந்த மொத்த விஜயங்களில் 52 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. ஒரு மாத காலப்பகுதியினுள் அதிகளவானோர் விஜயம் செய்யும் பகுதியாக தரப்படுத்தப்பட்டுள்ளதுடன், நவம்பர் மாதத்தில் மாத்திரம் மொத்தமாக 19 மில்லியன் விஜயங்கள் பதிவாகியிருந்தன. இது 2017 ஜனவரி மாதத்தில் 12.5 மில்லியனாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

தேசத்தின் வளர்ந்து செல்லும் ஒன்லைன் பயன்பாட்டின் பிரகாரம், அதிகளவானோர் நாடும் மாபெரும் ஒன்லைன் சந்தைப்பகுதியாக திகழும், மைஅயn.டம பிரத்தியேகமான விஜயம் செய்வோரின் எண்ணிக்கையில் 32 சதவீத வளர்ச்சியையும் பதிவு செய்திருந்தது. நவம்பர் மாதத்தில் மாத்திரம், மொத்த பிரத்தியேகமான விஜயம் செய்திருந்தவர்களின் எண்ணிக்கை 3.3 மில்லியனாக பதிவாகியிருந்தது. இந்தப்பெறுமதி 2017 ஜனவரி மாதத்தில் 2.5 மில்லியனாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. பிரத்தியேகமாக விஜயம் செய்பவர் என்பதன் மூலம் இணையத்தளத்தை மாதத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவை விஜயம் செய்த போதிலும், ஒரு தடவை மாத்திரம் கணக்கில் எடுக்கப்படுவதை குறிக்கும்.

 

ikman.lk ன் தொடர்ச்சியான மற்றும் இடைவிடாத வளர்ச்சி மூலமாக பாவனையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட அனுபவம் வழங்கப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. மேலும், இணையப்பக்கத்துக்கு விஜயம் செய்யும் தடவைகளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பை அவதானிக்க முடிந்தது. பிரத்தியேகமாக விஜயம் செய்வோரின் எண்ணிக்கை மற்றும் மொத்த பார்வையாளர்களின் எண்ணிக்கை இடையிலான விகிதத்தின் சராசரி பெறுமதியின் பிரகாரம், மாதமொன்றில் ஒரு நபர் விஜயம் மேற்கொள்ளும் தடவைகளின் எண்ணிக்கை ஆறாக பதிவாகியிருந்தது.

 

மேலும், 2017ம் ஆண்டில் ikman.lk ல் பதிவு செய்யப்பட்டிருந்த மொத்த புதிய விளம்பரங்களின் எண்ணிக்கை 13 சதவீதத்தினால் அதிகரித்திருந்தது. இதில் நவம்பர் மாதத்தில் அதியுயர் பெறுமதியான 170,000பதிவாகியிருந்தது. இதனூடாக இந்த இணையத்தளத்தின் மீது விற்பனையாளர்கள் அதிகளவு நம்பிக்கை கொண்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

ஆனாலும், இந்த புள்ளி விவரங்கள் கிடைத்திருந்த மொத்த விளம்பரங்களை பிரதிபலிப்பதாக அமைந்திருக்காததுடன், கிடைக்கும் சகல விளம்பரங்களும் ikman.lk ன் விதிமுறைகளுக்கமைய காணப்படாவிடின் அவை ஒன்லைனில் பதிவு செய்யப்படுவதுமில்லை. அத்துடன், சகல பதிவு செய்யப்படும் சகல விளம்பரங்களும் இரு மாதங்களின் பின்னர் சுயமாக அழிக்கப்படும். இதனூடாக இணையத்தளம் மெருகேற்றப்பட்ட நிலையில் பேண உதவியாக அமைந்துள்ளது.

 

ஒன்லைனில் கொள்வனவு மற்றும் விற்பனை ஆகியவற்றில் அதிகரிப்பை ஏற்படுத்துவதில் ikman.lk ன் ஆதிக்கத்தில் பங்களிப்பு வழங்கிய மற்றுமொரு விடயமாக ஆர்வமுள்ள கொள்வனவாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருந்தமையை குறிப்பிடலாம். 2017 நவம்பர் மாதத்தில், ikman.lk க்கு 2.4 மில்லியன் ஆர்வமுள்ள கொள்வனவாளர்கள் ஈர்க்கப்பட்டிருந்தனர். 2017 ஜனவரியுடன் ஒப்பிடுகையில் இது 14 சதவீத அதிகரிப்பை பதிவு செய்திருந்தது. இந்த புள்ளி விவரங்களின் பிரகாரம், ikman.lk மீது முறையான வளர்ச்சியை பதிவு செய்திருந்தது. ஒவ்வொரு விற்பனையின் போதும் ஆகக்குறைந்தது சுமார் 14 ஆர்வமுள்ள கொள்வனவாளர்களின் ஈடுபாட்டை பதிவு செய்திருந்தன.

 

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/IMG-2.jpg”]

[ot-caption title=”” url=”http://utvnews.lk/wp-content/uploads/2018/01/IMG-3.jpg”]

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஊரடங்குச் சட்டம் நீக்கம்; வர்த்தக நிலையங்கள் பூட்டு

ஒவ்வொரு மாதமும் 5ம் திகதி சமையல் எரிவாயு விலையில் திருத்தம்

மெனிங் சந்தை மீண்டும் 4 நாட்களுக்கு பூட்டு