சூடான செய்திகள் 1

48 மணித்தியாலத்தில் 700 பேர் கைது…

(UTV|COLOMBO) விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 48 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட  மதுபோதையில் வாகனம் செலுத்திய 700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 3,036 வாகனங்கள் தொடர்பில் வழக்குகள் பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் மதுபோதையுடன் வாகனம் செலுத்திய 941 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

மகரகம ஆயுர்வேத திணைக்களத்தின் அதிகாரிகள் இரண்டு பேர் கைது

ரஞ்சன் குரல் பதிவு; அறிக்கை தருமாறு உத்தரவு

ரயில் பணிப்புறக்கணிப்பு – இன்று விசேட அமைச்சரவைக் குழுக் கலந்துரையாடல்