வகைப்படுத்தப்படாத

மிமிக்ரி செய்து அசத்திய டிரம்ப்

(UTV|AMERICA)-பிரதமர் நரேந்திரமோடி கடந்த வருடம் ஜூன் மாதம் அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். அப்போது அந்த நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்பை சந்தித்தார். அப்போது ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் குவிக்கப்பட்டது குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது ஆப்கானிஸ்தான் குறித்து மோடி கருத்து கூறுகையில், ‘சிறு லாபத்திற்காக இந்த அளவுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வேறு நாட்டை பார்க்க முடியாது’ என்று தெரிவித்து இருந்தார். அவர் அமெரிக்காவை புகழ்ந்தே கூறியிருந்தார்.

ஆனால் பிரதமர் மோடியின் கருத்து டிரம்புக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. உலக நாடுகள் அமெரிக்காவை ஆதாயம் தேடும் ஒரு நாடாக பார்க்கிறது என மோடி பேசியதாக அவர் தவறாக கருதினார்.

அதை தொடர்ந்து நடைபெற்ற அதிகாரிகளுடன் ஆன ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடியின் ஆங்கில உச்சரிப்பை டிரம்ப் மிமிக்ரி செய்து கிண்டலடித்து பேசியுள்ளார். இந்தியாவில் ஆங்கிலத்தை உச்சரிக்கும் முறையிலேயே அவர் பேசி இருக்கிறார்.

இத்தகவலை அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ஒரு முன்னணி நாளிதழ் வெளியிட்டுள்ளது. டிரம்ப் இந்திய ஆங்கில உச்சரிப்பை கேலி செய்யும் வழக்கம் உடையவர் என்று கருதப்படுகிறது. இருந்தாலும் இந்திய பிரதமரின் பேச்சை இவ்வாறு மிமிக்ரி செய்து பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா சென்ற போது மோடியை தனது உண்மையான நண்பர் என டிரம்ப் டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது இப்படியொரு சர்ச்சை வெடித்துள்ளது. இதற்கு வெள்ளை மாளிகையில் இருந்து விளக்கம் அளிக்கவில்லை.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

‘ஓசியன் சீல்ட்’ இன்று திருகோணமலை வந்தது

பாதீடு தொடர்பான குழுநிலை விவாதத்தின் 15 ஆவது நாள் இன்று

புதுடில்லியில் இலங்கை இராணுவத்தின் வெசாக் பந்தல்