வகைப்படுத்தப்படாத

நாட்டின் அனைத்து மக்களின் உரிமைக்காவும் முன்நிற்பேன் – ஜனாதிபதி

(UTV|COLOMBO)-இன மத பேதங்களுக்கு அப்பால் நாட்டின் அனைத்து மக்களினது உரிமைகளுக்காகவும் முன்நிற்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அவர் இதனை தெரிவித்தார்.

பொது சொத்துக்களை கொள்ளையிட்ட ஒருவரையும் பொதுமக்கள் மன்னிக்கக் கூடாதென தெரிவித்துள்ள ஜனாதிபதி, தாமும் யாருக்கும் மன்னிப்பு வழங்க தயாரில்லையெனவும் குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்தமுறை தேர்தலில் வேகமாக முன்னேறி வந்துள்ள கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பென, ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஆய்வு செய்த ஆய்வாளர்கள் இதனைத் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கந்தளாய் பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் இவ்வாறு அணிசேர்ந்திருப்பது தூய அரசியல் பயணத்திற்காகவேயாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்தி, 2020 தேர்தலில் நாடாளுமன்றத்தை பலப்படுத்தி ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமெனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

රංජන්ට එරෙහි පැමිණිල්ලේ සාක්‍ෂි සටහන් කර ගැනීම කල් යයි

President says his life under threat

இராணுவ ஜெனரல் மற்றும் பாதுகாப்பு படைப் பிரதானியாக பதவி உயர்வு