வணிகம்

இலங்கையின் மாபெரும் நீச்சல் போட்டிகளுக்கு ரிட்ஸ்பரி அனுசரணை

(UTV|COLOMBO)-இலங்கையின் முதல் தர சொக்லட் வர்த்தக நாமமான ரிட்ஸ்பரிää இலங்கையின் விளையாட்டுத்துறையை மேம்படுத்துவதற்கு பெருமளவு பங்களிப்பை வழங்கி வருகிறது. இதனடிப்படையில் முதன் முறையாக நீச்சல் போட்டிகளுக்கு அனுசரணை வழங்க முன்வந்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் கைகோர்த்து, இலங்கையில் காணப்படும் மாபெரும் நீச்சல் தடாகத்தில் அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான நீச்சல் சம்பியன்சிப் போட்டிகளை முன்னெடுப்பதற்கு நிறுவனம் தனது அனுசரணையை வழங்க முன்வந்துள்ளது.

இந்த சம்பியன்சிப் போட்டிகள் 130 க்கும் அதிகமான பாடசாலைகளின் 2500 நீச்சல் வீரர்களை கவரும் வகையில் அமைந்திருக்கும். பெருமளவு 96 தனிநபர் நிகழ்வுகள் மற்றும் 24 ரிலே நிகழ்வுகள் 9, 11, 13, 15, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்டவர்களுக்கு கனிஷ்ட,சிரேஷ்ட மற்றும் சம்பியன்சிப் கிண்ணங்களுக்கு வழங்கப்படும்.
பல்கலைக்கழகத்தின் உப வேந்தரான பேராசிரியர் சம்பத் அமரதுங்க கருத்துத்தெரிவிக்கையில், “முன்னணி சொக்லட் வர்த்தக நாமம் எனும் வகையில் ரிட்ஸ்பரி வழங்கும் ஊக்குவிப்பு தொடர்பில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். இவர்களின் பங்களிப்பின் மூலமாக பெருமளவு பங்குபற்றுநர்களை நீச்சலில் ஈடுபட ஊக்குவிப்பதாகவும்ää தமது சுகாதாரம் மற்றும் உடற்தகைமை மட்டங்களை பேண உதவுவதாகவும் அமைந்திருக்கும்” என்றார்.

சிபிஎல் ஃபுட்ஸ் இன்டர்நஷனல் பிரைவட் லிமிட்டெட் சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிலுபுல் டி சில்வா கருத்துத்தெரிவிக்கையில், “சொக்லட் விற்பனையில் சந்தை முன்னோடியாக திகழும் ரிட்ஸ்பரி, இளம் விளையாட்டு வீர, வீராங்கனைகளை ஊக்குவித்து அவர்களின் திறமைகளை வெளிக்கொணர முன்வந்துள்ளது. ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்துடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமை கொள்வதுடன், தமது திறமைகளை வெளிப்படுத்தக்கூடிய நீச்சல் வீரர்களை உருவாக்குவதற்கு இது சிறந்த வாய்ப்பாகவும் அமைந்துள்ளது” என்றார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சீகிரியாவை பார்வையிட வருபவர்களுக்கு ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பு…

இலங்கை ரூபாவின் பெறுமதி உயர்வு

பதிவு செய்யப்பட்ட உணவகங்களை மீண்டும் திறக்க அனுமதி