வகைப்படுத்தப்படாத

சிறுவர் உரிமைகளைப் பாதுகாக்கும் முயற்சிகளில் இலங்கை கணிசமான முன்னேற்றம்

(UTV|COLOMBO)-சிறுவர்களின் உரிமைகளை மேம்படுத்தும் முயற்சிகளில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளதென சிறுவர் மற்றும் மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் சந்திரானி சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெற்ற சிறுவர் உரிமைகள் தொடர்பான சர்வதேச மாநாட்டில் கலந்துகொண்டு இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

இலங்கையின் சிறுவர் உரிமை தொடர்பான சட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டு இலங்கையின் இளம் தலைமுறைக்கு சர்வதேச தரத்திலான பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக செயலாளர் கூறினார்.

 

இலங்கை சிறுவர் உரிமைகளை மேம்படுத்தும் விவகாரத்தில் முன்னேற்றகரமான அரச கொள்கைகளை தொடர்ந்தும் அனுசரித்து வருகிறது. இவற்றில் சகலருக்கும் இலவச, சுகாதார வசதிகளை வழங்குவதும் உள்ளடங்கும். இதன் காரணமாக பிள்ளைகளின் உரிமைகளைப் பாதுகாத்து மேம்படுத்துவதில் இலங்கை கணிசமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்று திருமதி சேனாரத்ன மேலும் குறிப்பிட்டார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Seven injured after lorry loses brakes and crashes into multiple vehicles

பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டிருந்தால் அந்நாடு அதற்கான விளைவுகளை சந்திக்கும்

වෛද්‍ය සාෆි නිදහස් කරයිද?