வகைப்படுத்தப்படாத

லிந்துலையில் இரண்டு கடைகள் தீயினால் எரிந்து நாசம்

(UTV|COLOMBO)-லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மெராயா நகரில் இன்று (18) அதிகாலை 3.15 மணியளவில் சில்லறை வர்த்தக நிலையங்கள் இரண்டு முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இத் தீவிபத்தில் எவருக்கும் உயிராபத்தோ, காயங்களோ ஏற்படவில்லை என்ற போதிலும் பொருட்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

பிரதேச பொது மக்கள், பொலிஸார், நுவரெலியா மாநகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்படவில்லை என்றும் மின்சார ஒழுக்கு காரணமாக இத் தீ ஏற்பட்டிருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகின்றது.

லிந்துலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

තිරිගු පිටි කිලෝග්‍රෑමයක මිල රුපියල් 8 කින් ඉහළට

BAR briefed on SOFA, MCC & Land Act

Anglican Church Head to visit Sri Lanka