(UTV|COLOMBO)-எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் நாளை தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
நாளை மறுதினம் முதல் பெப்வரி 4ம் திகதி வரை வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல்.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 28ம் திகதி விசேட வாக்காளர் அட்டை விநியோக தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாவிட்டால் அருகிலுள்ள தபால் நிலையத்திற்கு சென்று தமது அடையாளத்தை உறுதிப்படுத்தி வாக்காளர் அட்டையைப் பெற்றுக் கொள்ள முடியும் என திரு.ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]