(UTV|COLOMBO)-SLIITயின் மென்பொருள், அறிவு, தகவல் முகாமைத்துவம் மற்றும் செயலாக்கி என்பவற்றின் 11வது சர்வதேச செயலம்ரவான SKIMA 2017 நிகழ்வை அண்மையில் கொழும்பில் நடாத்தியது. இதனூடாக அறிவியல் முகாமைத்துவம், மென்பொறியியல் முன்னணி துறைசார் வல்லுனர்கள் தமது எண்ணங்கள் மற்றும் அனுபவங்களை அனைவருடனும் பகிர்ந்துக் கொண்டனர். இவ்விழாவின் சிறப்பு விருந்தினராக WSO2 இன் தலைமை நிறுவுனர் மற்றும் தலைமை வடிவமைப்பாளரான சஞ்சீவ வீரவங்ச கலந்து சிறப்பித்தார்.
தெற்கு மற்றும் ஆசிய கண்டங்களின் ஆராய்ச்சியாளர்களை ஒன்றிணைக்கும் முகமாக இடம்பெறும் இக்கருத்தரங்கு முதன்முதலில் 2006 ஆம் ஆண்டு தாய்லாந்தில் சியாங் மாய் எனுமிடத்தில் நடைப்பெற்றது. அதனைத் தொடர்ந்து SKIIMA செயலமர்வானது, கத்மண்டு, மொராக்கோ, பூட்டான், இத்தாலி, சீனா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
கொழும்பில் நடாத்தப்பட்ட இவ்விழாவில் பல பிரிவினர் கலந்;துக்கொண்டனர். அவர்களுள் SLIIT கல்வியகத்தின் கணனிப்பிரிவின் சிரேஸ்ட விரிவுரையாளரான அனுராத ஜயக்கொடியின் வழிக்காட்டலின் கீழ் இதில் பங்குபற்றிய குழுவினர் அதிசிறந்த ஆராய்ச்சி போஸ்டருக்கான விருதை தட்டிச் சென்றனர்.
SLIIT இன் தலைமை நிர்வாகி மற்றும் உப அதிபருமாகிய பேராசிரியர் லலித் கமகே இது தொடர்பாக கருத்து தெரிவிக்கையில், SKIMA குழுவினோடு இணைந்து பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததையிட்டு நாம் பெருமைக் கொள்கிறோம். கலந்துக் கொண்டோர் அனைவரும் இச்செயலமர்வு தொடர்பில்; தம் பாராட்டுக்களை தெரிவித்தனர். இத்தகையதொரு கருத்தரங்கை வெற்றிகரமாக நடாத்தி முடித்ததையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகிறோம்;.” என கூறினார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]