வகைப்படுத்தப்படாத

70ஆவது சுதந்திர தினத்தை கோலாகலமாக கொண்டாட அரசாங்கம் தீர்மானம்

(UTV|COLOMBO)-இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினத்தை மிகவும் கோலாகலமாகவும், பெருமிதத்தோடும் கொண்டாட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒரே தேசம் என்ற தொனிப்பொருளில் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது.

இதற்குரிய சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் பங்கேற்புடன் சுதந்திர விழா இடம்பெறவுள்ளது.

முப்படைகள் மற்றும் பொலிசாரின் பாரம்பரிய இராணுவ அணிவகுப்பிற்கு அப்பால் இம்முறை கொழும்பு மாநகர சபைத் திடலில் கலாசார நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் எலிஸபெத் மகாராணியை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பிரிட்டன் இளவரசர் எட்வேர்ட் கலந்துகொள்ளவுள்ளார். மேலும் 70 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பங்கேற்குமாறு பல நாட்டு தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

කොළඹ හා හෝකන්දර යන ප්‍රදේශ කිහිපයකට පැය 16 ක ජල කප්පාදුවක්

குவாத்தமாலா ஜனாதிபதி ஜெரூசலத்தை ஏற்றுக்கொண்டார்

බොලිවුඩ් සිනමා නළු SRK දුෂ්ඨ චරිතයකින් ප්‍රේක්ෂකයන් හමුවට