வகைப்படுத்தப்படாத

900 கிலோ கொக்கேய்ன் போதைப்பொருளை அழிக்கும் நடவடிக்கை ஆரம்பம்

(UTV|COLOMBO)-900 கிலோகிராம் கொக்கெய்ன் தொகை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலை அழிக்கும் நடவடிக்கைகள் தற்போதைய நிலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கட்டுநாயக்க முதலீட்டு ஊக்குவிப்பு சபை வளாகத்தில் இந்த கொக்கெய்ன் தொகை அழிக்கப்படுகின்றது.

குறித்த கொக்கெய்ன் தொகை அங்கு நீரில் கரைக்கப்பட்டு பின்னர் புத்தளம் பகுதிக்கு கொண்டுசெல்லப்பட்டு முற்றாக அழிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கொக்கேய்ன் தொகை அழிக்கப்படுவதை பார்வையிடுவதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர்கள் சிலரும் அங்கு சென்றுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை அழிக்கும் செயற்பாடொன்று முன்னெடுக்கப்படுவது இதுவே முதற்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

குழந்தையின் ஸ்கேன் படத்தில் இறந்த தாத்தாவின் முகம்

உதயங்க வீரதுங்கவின் காணிகளை விற்க, உரிமைமாற்றம் செய்ய இடைக்கால தடை உத்தரவு

චීනයෙන් දුම්වැටි ආනයනය නතර කරන බවට සහතිකයක්