வகைப்படுத்தப்படாத

இரு அரச தலைவர்கள் அடுத்தவாரம் இலங்கை விஜயம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அழைப்பிற்கு அமைவாக இரண்டு அரச தலைவர்கள் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை அடுத்தவாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

இதற்கமைவாக சிங்கப்பூர் பிரதமர் லீ ஷியன் லூங் [ Lee Hsien Loong]  எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இவர் இலங்கையில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார்.
அத்துடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை தொடர்பிலும் இதன்போது பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

இதேபோன்று இந்தோனேசிய ஜனாதிபதி யோக்கோ விடோடோ [Joko Widodo] எதிர்வரும 25ஆம் திகதி இலங்கைக்கான விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்றும் நாளையும் இணையதள சேவைகள் முடக்கம்

බ්‍රිතාන්‍යයෙන් ගෙන්වූ කසල කන්ටේනරය ගැන රස පරීක්‍ෂණයක්

பிரான்ஸ் போராட்டம் ; 1700 பேர் கைது…