(UTV|COLOMBO)-ஜனாதிபதியின் பதவி காலம் 5 வருடத்திற்குள் நிறைவடையும் என உயர் நீதிமன்றத்தின் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் அறிவித்துள்ளதாக ஜனாதிபதி செயலாளர் தெரிவித்தார்.
தனது பதவி காலம் எத்தனை வருடங்களுக்குறியது என அறிவிக்குமாறு ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன உயர் நீதிமன்றிடம் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசேட தீர்மானங்களை அறிவிக்க மூவரடங்கிய நீதிபதிகள் குழாமே உயர்நீதிமன்றத்தினால் நியமிக்கப்படும் நிலையில் , அதிவிசேட தீர்மானங்களை அறிவிப்பதற்காகவும் , ஆராய்வதற்காகவும் ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் நியமிக்கப்படுகின்றமை முக்கிய அம்சமாகும்.
1978ஆம் ஆண்டு அரசியல் அமைப்பிற்கு அமைய 6 வருடங்களாக காணப்பட்ட ஜனாதிபதி பதவிக்காலம் 19வது அரசியல் அமைப்பு சீர்த்திருத்தத்தில் 5 ஆண்டுகளாக குறைக்கப்பட்டது.
இதற்கு அமைவாகவே ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்களுக்குள் நிறைவடையும் என தெரிவிக்கப்படுகிறது.