(UTV|COLOMBO)-உயிரியல் சீர்கேடுகளை ஏற்படுத்துகின்ற பொலிதீன் மற்றும் மீள்சுழற்சி செய்ய முடியுமான பொலிதீன் வர்த்தகத்தில் ஈடுபடுகின்ற வர்த்தகர்களை பதிவு செய்யும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட ஆரம்பத்தில் இருந்து பொலிதீன் பயன்பாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக தோன்றியுள்ள பிரச்சினையை கருத்திற் கொண்டு, இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் அது சம்பந்தமான அளவுகோல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் அந்த வியாபாரிகளை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவ்வகையான பொலிதீன்கள் இலங்கையில் தயாரிக்கப்படுவது குறைவு என்பதுடன், பெரும்பாலும் வௌிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரியல் சீர்கேடுகளை ஏற்படுத்துகின்ற பொலிதீன் மற்றும் மீள்சுழற்சி செய்ய முடியுமான பொலிதீன் இறக்குமதி, உற்பத்தி மற்றும் அவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்ற சேர்க்கைகள் இறக்குமதி செய்யப்படுவது சம்பந்தமான பரிந்துரைகள் அடங்கிய அளவுகோல் இவ்வாறு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]