(UTV|COLOMBO)-தமது நாடு தற்காலிகமாக இலங்கை தேயிலைக்கு தடை விதித்தமை ரஷ்யாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லுறவில் எந்தவித பாதிப்பையும்; ஏற்படுத்தாது என்று இலங்கையில் உள்ள ரஷ்ய தூதுவர் யுறி மெற்றரி தெரிவித்துள்ளார்.
பொதி செய்யப்பட்ட இலங்கை தேயிலையில் காணப்பட்ட வண்டின் காரணமாகவே ரஷ்யா இலங்கை தேயிலைக்கு தற்காலிக தடையை விதித்தது என்றும் அவர் சுட்டிகாட்டினார்.
ரஷ்ய தூதுவருக்கும் கைத்தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சருக்கும்.. இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
இலங்கையுடனான நல்லுறவை வலுப்படுத்த நாம் விரும்புகின்றோம். இரு நாடுகளுக்கு இடையிவலான வர்த்தக நடவடிக்கைகள் தற்போது குறைந்தளவிலேயே காணப்படுகின்றன. பாரம்பரிய தயாரிப்புத்தறையில் உள்ள வர்த்தக நடவடிக்கையை விரிவுப்படுத்த வேண்டும்.
இந்த விடயம் தொடர்பில் மொஸ்கோவில் இந்த வருடத்தில் நடைபெறுவுள்ள ரஷ்ய இலங்கை ஆணைக்குழு கூட்டத்தில் இலங்கை கலந்து கொள்ளும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.
இதனை தொடர்ந்த பாரியளவிலான வர்த்தக நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என்றும் தூதுவர் சுட்டிகாட்டினார்.
இலங்கையின் அபிவிருத்தி தொடர்பில் எரிசக்தி மற்றும் விவசாயத்துறையின் மேம்பாட்டுக்காக ரஷ்யா முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]