வகைப்படுத்தப்படாத

முஸ்லிம் காங்கிரஸ் வங்குரோத்து அரசியலை ஆரம்பித்துள்ளது-அப்துல்லாஹ் மஹ்ருப் குற்றச்சாட்டு

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரசின் எழுச்சியைப் பொறுக்கமாட்டாத முஸ்லிம் காங்கிரஸ்காரர்கள் தமது அரசியல் வங்குரோத்து தனத்தை மூடி மறைப்பதற்காக, மக்கள் காங்கிரசின் முக்கியஸ்தர்கள் தங்கள் கட்சியில் இணைந்து வருவதாக கட்டுக்கதைகளைப் பரப்பி வருவதாக மக்கள் காங்கிரசின் தேசிய அமைப்பளார் அப்துல்லாஹ் மஹ்ருப் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார்.

மக்கள் காங்கிரசோடு தொடர்பில்லாத கிண்ணியாவைச் சேர்ந்த இரண்டு நபர்களை முஸ்லிம் காங்கிரசில் இணைத்துவிட்டு அவர்களை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களாக சித்தரித்து செய்திகளை வெளியிட்டு ஆதாயம் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் காங்கிரசுக்கு சரிநிகராக வளர்ந்து வரும் மக்கள் காங்கிரஸ் இம்முறை உள்ளுராட்சித் தேர்தலில் முஸ்லிம் பிரதேசங்களில் பெரும்பாலான சபைகளைக் கைப்பற்றக்கூடிய வாய்ப்பு உருவாகியுள்ளதால் முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் தொடர்பான பீதியில் இவ்வாறான நாடகங்களை அரங்கேற்றி மக்களை குழப்பி வருகின்து எனவும் இது தொடர்பில் எவரும் அலட்டிக்கொள்ள வேண்டாமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருமலை மாவமட்டத்திலும்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வெற்றி உறுதிசெய்யப்பட்டதை அறிந்துகொண்ட முஸ்லிம் காங்கிரசினர் மக்களை குழப்பும் வேலையை ஆரம்பித்துள்ளனர். என்று தெரித்த பாராளுமன்ற உறுப்பினர் மக்கள் காங்கிரஸ் திருமலை மாவட்டத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை  செய்துள்ளது. எதிர் காலத்திலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Five Indian fishermen, 34 vessels in Sri Lanka’s custody – Indian Govt.

25ஆயிரம் பாடசாலை மாணவர்கள் பாதிப்பு

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இன்று நிர்வாக முடக்கல் போராட்டம்