வகைப்படுத்தப்படாத

தடை செய்யப்பட்ட பொலித்தீன் பயன்பாட்டை தடுக்கும் வகையில் சுற்றிவளைப்பு இன்று முதல்

(UTV|COLOMBO)-தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகளை பயன்படுத்துவோரை சுற்றிவளைக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு அமைவாக கடந்த ஆண்டு செப்டம்பர் 1ம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல்இது தொடர்பில் விடுவிக்கப்பட்டது.

அந்தவகையில் சகல வகை பொலித்தின்கள் மற்றும் பொலி ப்ரொப்லீன்கள், அவை சார்ந்த உற்பத்திகள் மீது தடை விதிக்கப்பட்டன. இவற்றை இறக்குமதி செய்வதும், உற்பத்தி செய்வதும், பயன்படுத்துவதும் சட்டப்படி குற்றமாகும்.

இந்த விதிமுறைகளை மீறி தடை செய்யப்பட்ட பொலித்தீன் வகைகளை இறக்குமதி , உற்பத்தி மற்றும் பயன்படுத்துபவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் கொழும்பு பீப்பிள்ஸ் பார்க் வர்த்தக தொகுதிக்கு அருகில்  ஆரம்பமானது.

இந்த சுற்றிவளைப்பு பணிகளில் மத்திய சுற்றாடல் அதிகார சபை, மேல் மாகாண சபை, சுற்றாடல் பொலிஸ் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ඉන්දීය නව ආණ්ඩුවේ ප්‍රථම අයවැය ඉදිරිපත් කරයි

தீரன் பட பாணியில் யாழில் நடந்த கொடூர சம்பவம்!!

எட்டு மாவட்டங்களின் அனைத்து பாடசாலைகளும் மூடல்