வகைப்படுத்தப்படாத

இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் நாட்டிற்கு

(UTV|COLOMBO)-இறக்குமதி செய்யப்பட்ட ஒரு தொகை தேங்காய் அடுத்த வாரம் நாட்டிற்கு வந்தடையவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் இருந்து இவை கொண்டு வரப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.எச்.ரன்ஜித் தெரிவித்தார்.

இறக்குமதியாளர்கள் 11 பேர் தேங்காய் இறக்குமதிக்கு அனுமதி கோரியுள்ளதாக அமைச்சின் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

பிலிப்பைன்ஸிலிருந்தும் தேங்காய் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இறக்குமதி செய்யப்படவுள்ள தேங்காய்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டவுடன் அது தொடர்பில் ஆராயப்பட்டு துறைமுகத்திலிருந்து கொள்கலன்கள் விடுவிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் கூறுயுள்ளார்.

இறக்குமதியாளர்களுக்கு தெங்கு கொள்வனவுக்கு அனுமதி வழங்கப்பட்டதன் பின்னர் தேங்காய் விலை குறையும் வாய்ப்பு நிலவுவதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை வர்த்தகர்கள் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்வதாக நுகர்வோர் விவகார அதிகார சபை கூறியுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை இது தொடர்பான சுற்றிவளைப்பொன்றிற்காக தெல்கந்த சந்தைக்கு அதிகாரிகள் குழுவொன்று சென்றிருந்ததாக அதிகார சபை தெரிவித்தது.

அதன்போது அதிக விலைக்கு தேங்காய் விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முயன்ற அதிகாரிகளின் செயற்பாடுகளுக்கு வர்த்தகர்கள் தடங்கல்களை ஏற்படுத்த முயன்றுள்ளனர்.

அவர்களில் இருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியிலில் வைக்கப்பட்டதன்பின்னர் கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் பிணை வழங்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தேங்காய் ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையாக 75 ரூபா காணப்படுகின்றது.

இது போன்ற சுற்றிவளைப்புக்கள் தொடர்ந்து மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிடுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Admissions for 2019 A/L private applicants issued online

இந்தோனேசிய கவர்னர் கைது

தொழிற்சங்க நடவடிக்கைக்கு 121 தொழில் சங்கங்கள் ஆதரவு…