(UTV|COLOMBO)-அரசியல்வாதிகளின் உருவங்களை பயன்படுத்தி பதாகை மற்றும் சுவரொட்டிகளை காட்சிப்படுத்தல், தேர்தல் சட்டத்திற்கு அமைய தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இவ்வாறு உருவங்களை பயன்படுத்தி பிரச்சாரங்களில் ஈடுபடும் வேட்பாளர்களுக்கு எதிராக நடடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
எனினும் எந்தவொரு வேட்பாளரினதும் கட்சி காரியாலயத்தில், அவரின் புகைப்படம் மற்றும் அவருடைய கட்சி தலைவர்களின் படங்களை கட்சிப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் உருவங்களை பயன்படுத்தி பதாகை மற்றும் சுவரொட்டிகள் காட்சிப்படுத்தல் தொடர்பில் எதிர்காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]