விளையாட்டு

44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வில் ஜனாதிபதி

(UTV|COLOMBO)-பொலன்னறுவை மாவட்டத்தில் இடம்பெற்ற 44வது தேசிய விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

பொலன்னறுவை மாவட்ட விளையாட்டரங்கில் நேற்று இந்த விளையாட்டு விழா இடம்பெற்றது.

கடந்த 11ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த தேசிய விளையாட்டு விழாவில் 09 மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தி 1543 விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளும் 443 அதிகாரிகளும் பங்குபற்றினர்.

மிகச் சிறப்பாக திறமைகளை வெளிக்காட்டி வெற்றிபெற்ற வீரர்களுக்கான பதக்கங்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

25 வருட சேவையை நிறைவுசெய்த விளையாட்டுத்துறை அதிகாரிகளை பாராட்டி ஜனாதிபதியினால் தங்க விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் அமைச்சர் பைசர் முஸ்தபா, இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயானி விஜேவிக்ரம, மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், மாகாண விளையாட்டுத்துறை அமைச்சர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ரஃபேல் நடாலும் சந்தேகம்

இந்தியாவை தோற்கடித்து அவுஸ்திரேலிய ஒரு நாள் போட்டியில் வெற்றி

கோஹ்லிக்கு கொவிட்