வகைப்படுத்தப்படாத

ஜப்பான் அமைச்சர் தலைமையிலான குழுவினர் – அமைச்சர் ரவூப் ஹக்கீம் சந்திப்பு

(UTV|COLOMBO)-ஜப்பான் நாட்டின் காணி, அடிப்படை வசதிகள், போக்குவரத்து மற்றும் உல்லாசப்பயணத்துறை அமைச்சர் கெயிச்சி இசீ (Keiichi Ishii ) தலைமையிலான குழுவினர் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர்.

நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீமை  அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

 

இந்த சந்திப்பின்போது உத்தேச ஸ்ரீ ஜெயவர்த்தனபுர கோட்டே மலக்கழிவு வடிகாலமைப்புத் திட்டம், கண்டி கழிவுநீர் முகாமைப்படுத்தல் திட்டம், களுகங்கை உவர்நீர் தடுப்பு மற்றும் நீர் வழங்கல் திட்டங்கள் தொடர்பாகவும், திருகோணமலை நகர மற்றும் துறைமுக அபிவிருத்தி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

இலங்கையின் பல்வேறு முக்கிய நீர் விநியோகத் திட்டங்களுக்கும் சுகநல பாதுகாப்பு, மற்றும் கழிவுநீர் முகாமைப்படுத்தல் முதலான திட்டங்களுக்கு ஜப்பான் உதவி வருவதோடு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் ஜப்பானுக்கு மேற்கொண்ட விஜயத்தின் மூலம் ஜப்பானினால் வழங்கப்படும் உதவிகள் விரைவுபடுத்தப்பட்டிருப்பதாகவும் ,இலங்கை ஜப்பான் நட்புறவு நீண்டகாலமாக இருந்து வருவதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் இதன்போது தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

රජයට එරෙහි විශ්වාසභංගය වැඩි ඡන්දයෙන් පරාජයට පත්වෙයි

வீட்டின் மீது விழுந்து நொறுங்கிய விமானம் – பெண்கள் உள்பட 6 பேர் உயிரிழப்பு (VIDEO)

சில பிரதேசங்களுக்கு இன்று பலத்த மழை…