வகைப்படுத்தப்படாத

உத்தியோகபூர் வாக்குரிமை அட்டை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சிமன்ற தேர்தல் வாக்களிப்புக்கான உத்தியோகபூர் வாக்குரிமை அட்டை ஜனவரி மாதம் 19 ஆம் திகதி முதல் வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்துடன், ஜனவரி 28 ஆம் திகதி விசேட தினமாக பிரகடனப்படுத்தி, வாக்குரிமை அட்டை விநியோகம் இடம்பெறும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 3 ஆம் திகதிக்கு பின்னர் வாக்களர் வாக்குரிமை அட்டைகள் அஞ்சல் மூலம் விநியோகிக்கப்படாத அதேவேளை, வாக்குரிமை அட்டைகள் கிடைக்காத வாக்காளர்கள் அஞ்சல் அலுவலகத்திற்கு சென்று பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், தேர்தலுக்கான தற்காலிக அடையாள அட்டை விநியோகிக்கும் இறுதி தினம் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதியாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு முன்னர் அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு பொதுமக்களை கோரியுள்ளது.

341 உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்கள் இடம்பெறவுள்ள நிலையில், ஜனவரி 25 மற்றும் 26ஆம் திகதிகள், அரச பணியாளர்களுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பு தினங்களாக ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல் சட்ட மீறல்கள் மற்றும் மேலும் பல விடயங்கள் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுக்கு இடையிலான இரண்டு சுற்று பேச்சுவார்த்தையொன்றை நடத்துவதற்கும் தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அதன்படி கட்சியின் செயலாளர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் நாளை இடம்பெறவுள்ளதுடன், தேர்தல் தெரிவு அத்தாட்சி அதிகாரிகளுடனான கலந்துரையாடல் நாளை மறுதினம் இடம்பெறவுள்ளது.

இதனிடையே, தேர்தல் விதிமுறைகளை மீறிய ஒன்பது சம்பவங்கள் பதிவாகியுள்ளதுடன், அவற்றுடன் தொடர்புடைய 25 கைது செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஒரே கரையோரம் – ஒரே பாதை மாநாட்டில் உலகத்தலைவர்கள்

Former Defence Sec. and IGP granted bail

முறையற்ற விதத்தில் குப்பைகளை கொட்டிய 154 பேர் கைது