வகைப்படுத்தப்படாத

மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்?

(UTV|COLOMBO)-கனிய எண்ணெய் கையிருப்புகளை பராமரிக்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், எதிர்காலத்தில் எரிபொருள் நெருக்கடிக்கு முகங்கொடுக்கவேண்டி ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பில் கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டீ.ஜே.ராஜகருணா இதனைத் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் கப்பலொன்று வந்தால், 14 நாட்கள் அளவிலேயே எரிபொருளை வைத்துக்கொள்ள முடியும்.

14 நாட்களுக்குள் கப்பலொன்று வராவிட்டால், வீதியில் நிற்க வேண்டிய நிலை ஏற்படும்.

எனினும், மூன்று மாதங்களுக்கு எரிபொருளை வைத்துக்கொள்ள முடியும் என அரசாங்கம் கூறுகிறது.

மூன்று மாதங்களுக்கு எவ்வாறு எரிபொருளை வைத்திருக்க முடியும்?

அப்படியாயின் இன்றும் 90 கொள்கலன்கள் நிரப்ப வேண்டும்.

ஒரு மாதத்துக்கு எரிபொருளை வைத்திருக்க வேண்டுமாயின் 20 கொள்கலன்கள் நிரப்ப வேண்டும்.

அந்த 20ஐ நிரப்ப வேண்டுமாயின், இன்னும் 100 மில்லயன் டொலருக்கும் அதிக பணம் தேவைப்படும் என அவர் கூறியுள்ளார்

இதேவேளை, எரிபொருளை பாய்க்கும் பணிகள் கொழும்பிலும், முத்துராஜவெலயிலும் மேற்கொள்ளப்படுகின்றன.

இவை இரண்டும் 365 நாட்களும் இயங்குகின்றன.

அவ்வாறாயின், அவசர திருத்தப் பணிகளைக்கூட அவற்றில் மேற்கொள்ள முடியாது.

இந்த நிலையில், ஏதாவதொரு பிரச்சினை ஏற்பட்டால் பாதிப்பு ஏற்படும் என்று கனிய எண்ணெய் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டீ.ஜே.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ஸ்வீட் கார்லிக் சிக்கன் எப்படி செய்யலாம்?

வர்த்தகத்தில் முன்னுரிமை பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து ஜப்பானை தென்கொரியா நீக்கியது

சார்க் மாநாட்டில் இருந்து இந்தியா வெளிநடப்பு