(UTV|COLOMBO)-நாட்டின் ஊடாக வடகிழக்கு பருவமழை நிலைகொண்டுள்ள காரணத்தால் அநேகமான பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
அந்த நிலையம் வௌியிட்டுள்ள சிறப்பு வானிலை அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு , ஊவா , சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்கள் போன்று , களுத்துறை மாவட்டத்தின் சில பிரதேசங்கள் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அதேபோல், வடமேல் , மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மணிக்கு சுமார் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]