(UTV|COLOMBO)-பண்டிகை காலத்தால் அதிவேக வீதிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலத்தில் அதிவேக வீதிகளில் போக்குவரத்து அதிகமாக காணப்படுவதனால் அந்த வீதிகளின் நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகளில் அதிக வாகன நெரிசல் ஏற்படுகின்றது.
இதன் காரணமாக மேலதிக பணியாளர்களை சேவையில் ஈடுபடுத்த வேண்டியுள்ளதனால் அதிவேக வீதிகளின் நிர்வாக அதிகாரிகளின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை அதிவேக வீதிகளின் நுழைவுப் பகுதிகளில் மேலதிக நுழைவாயில்களை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வை பிரிவின் முகாமையாளர் எஸ்.ஓப்பநாயக்க தெரிவித்துள்ளார்.
அதிவேக வீதிகளில் பணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அத்துடன் பண்டிகை காலத்தில் அதிவேக வீதிகளில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அதிவேக வீதி நிர்வாகம் மற்றும் மேற்பார்வை பிரிவின் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]