(UTV|COLOMBO)-ஜனவரி மாதம் 8 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவருக்கு அறிவித்தல் விடுக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி மன்ற எல்லை நிர்ணய வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக அம்பகமுவ பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஹெலப்ரிய நந்தராஜா தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் இன்று ஆராயப்பட்டது.
இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மனுவில் அடங்கிய விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கருத்து கோரப்பட வேண்டும் என்றும் அதன் காரணமாக அவர் உயர்நீதிமன்றில் முன்னிலையாக வேண்டியது அவசியம் என பிரதம நீதியரசர் ப்ரியசத் டெப் தெரிவித்துள்ளார்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]