வகைப்படுத்தப்படாத

மண்சரிவு அபாயம்: 400க்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

(UTV|COLOMBO)-மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் வெலிமடை மற்றும் ஹல்துமுல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட ஒஹிய, உடவேரிய, லைபோன் ஆகிய தோட்டங்களில் இருந்த குடியிறுப்பாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

அண்மையில் பெய்த கடும் மழையை அடுத்து, 120 குடும்பங்களைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மக்கள் இவ்வாறு அங்கிருந்து இடம்பெயர்ந்துள்ளனர்.

இவர்கள் தற்காலிகமாக உடவேரிய தோட்டத்தில் கைவிடப்பட்ட தேயிலை தொழிற்சாலையொன்றில் தங்க வைக்கப்பட்ட போதிலும், அங்கு எவ்வித வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை என மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

கடந்த ஒரு வார காலமாக குறித்த தேயிலைத் தொழிற்சாலையில் இம் மக்கள் தங்கியுள்ளனர். மேலும் சிலர் பாடசாலையிலும் தோட்ட ஊழியர் வீட்டிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

எனவே, இப் பகுதியை சேர்ந்த அரசியல் தலைமைகள் இதற்கு உரிய நடவடிக்கை எடுத்து தங்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்க வேண்டும் என்பதோடு, அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ලක්ෂ 82ක් වටිනා මැණික් ගල් සොරා ගත් පුද්ගලයෙකු අත්අඩංගුවට

ප්‍රවීණ ගොල්ෆ් ක්‍රීඩකයින් සමඟ එක්ව යුද්ධ හමුදාව ගොල්ෆ් ක්‍රීඩාව නගාසිටුවන්න සුදානම්

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்