வகைப்படுத்தப்படாத

தொடரூந்து தொழிற்சங்க நடவடிக்கை 5 ஆவது நாளாகவும்

(UTV|COLOMBO)-நேற்று ஜனாதிபதி செயலாளருக்கும் தொடரூந்து தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தோல்வியடைந்ததை தொடர்ந்து, இன்று 5 ஆவது நாளாகவும் தொடரூந்து தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கின்றது.

ஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்னான்டோவின் இல்லத்தில் இந்த சந்திப்பு நேற்று 4 மணித்தியாலங்கள் இடம்பெற்றது.

இதன்போது தொடரூந்து தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளுக்கு முறையான தீர்வுகள் கிடைக்கவில்லையென தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எவ்வாறெனினும் இன்று இடம்பெறவுள்ள தொடருந்து தொழிற்சங்கங்களுக்கு இடையிலான கலந்துரையாடலில் சாதாரணதர பரீட்சையில் தோற்றும் மாணவர்களின் நலன் கருதி நாளைய தினம் தொடரூந்து சேவையை அமுல்படுத்துவது குறித்து தீர்மானிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

நவாஸ் ஷெரிப் மனைவி அறைக்குள் புகுந்த மர்ம நபர் கைது

Serkis, Knight, Wyatt up for “Venom 2”

பொகவந்தலாவை தோட்டம் ஒன்றில் மண்சரிவு