வகைப்படுத்தப்படாத

அரச பாடசாலைகளின் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளில் இன்று முதல் மூன்றாம் தவணை விடுமுறை ஆரம்பமாகின்றன.

இவ்வாறு மூன்றாம் தவணை விடுமுறைக்கான மூடப்படும் பாடசாலைகள் 2018ம் ஆண்டின் முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் 2ம் திகதி மீண்டும் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கா.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்பட உள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

ஜி.சி.ஈ சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (12) ஆரம்பமாகின்றது. இதற்குரிய சகல நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இம்முறை 6 இலட்சத்து 88 ஆயிரத்து 573 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

விளையாட்டு மையத்தில் பயங்கர தீ விபத்து – 18 இளைஞர்கள் பலி

யூத நாடானது இஸ்ரேல் – சர்ச்சைக்குரிய மசோதா

கனடாவை தாக்கிய ‘டோரியன்’ புயல் – 5 லட்சம் பேர் பாதிப்பு