வகைப்படுத்தப்படாத

4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்த பாங்கொக்

(UTVNEWS|COLOMBO) – அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தாய்லாந்தின் தலைநகரமான பாங்கொக் தொடர்ச்சியாக 4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

உலகின் தலைசிறந்த 10 சுற்றுலா நகரங்கள் எது என்பது தொடர்பில் 200 நகரங்களை இலக்காக கொண்டு ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதில் அதிக சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் தாய்லாந்தின் தலைநகரமான பாங்காக், தொடர்ச்சியாக 4-வது முறையாக முதல் இடத்தை தக்கவைத்துள்ளது.

வருடத்திற்கு 2 கோடியே 28 இலட்சம் சுற்றுலா பயணிகள் பாங்கொக் நகரத்திற்கு வந்து செல்கிறார்கள்.

2ஆவது இடத்தை பாரீஸ் மற்றும் 3-வது இடத்தை லண்டன் நகரங்கள் தன்வசப்படுத்தி உள்ளன.
இதன்தொடர்ச்சியாக துபாயில் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை ஆண்டிற்கு 1 கோடியே 59 லட்சம் ஆக இருக்கிறது.

4 ஆவது இடத்தை சிங்கப்பூர் மற்றும் 5 ஆவது இடத்தை கோலாலம்பூர் இடம்பிடித்துள்ளன.

மேலும் நியூயார்க், இஸ்தான்புல், டோக்கியோ மற்றும் ஆந்தாலியா போன்ற நகரங்கள் அடுத்தடுத்த இடங்கள் என முதல் பத்து இடங்களில் இணைந்துள்ளன.

கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் 200 நகரங்களில் சர்வதேச அளவிலான சுற்றுலா பயணிகளின் வருகை 76 சதவீதமாக உயர்ந்து இருக்கிறது.

Related posts

EU to take migrants from Alan Kurdi rescue ship

Navy arrests a person with ‘Ice’

அமைச்சரவை மாற்றம் இன்றைய தினம்?