உள்நாடு

4 நாட்களில் 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டிய இலங்கை போக்குவரத்து சபை

கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை, 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.

பண்டிகைக் காலத்தையொட்டி அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபட்டமையினால் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய் வரை வருமானமாக ஈட்ட முடிந்ததாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் ஆர்.டி சந்திரசிறி குறிப்பிட்டார்.

இந்த வருடம் தமிழ்,சிங்களப் புத்தாண்டையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சுமார் 350 பேருந்துகள் மேலதிகமாக இயக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Related posts

நீராடச் சென்ற 2 இளைஞர்கள் பலி

மிரிஸ்ஸ துப்பாக்கிச் சூடு சம்பவம்; துப்பாக்கிதாரி கைது

இலங்கையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

editor