கேளிக்கை

4 மணிநேரம் மேக்கப், 120 உடை-கீர்த்தி

(UTV|INDIA)-சாவித்ரியாக நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டதாக கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். நடிகையர் திலகம் சாவித்ரி கணேசனின் வாழ்க்கை வரலாறு மகாநதி என்ற பெயரில் படமாக்கப்பட்டுள்ளது.

கீர்த்தி சுரேஷ் சாவித்ரியாகவும், துல்கர் சல்மான் ஜெமினி கணேசனாகவும் நடித்துள்ளனர். சாவித்ரியாக நடித்தது குறித்து கீர்த்தி சுரேஷ் கூறியிருப்பதாவது,

பயம்
சாவித்ரியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் நாக் அஸ்வினும், தயாரிப்பாளரும் கூறியபோது பயமாக இருந்தது. நான் எப்படி சாவித்ரியாக நடிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் இருவரும் என்னால் நிச்சயம் முடியும் என்று நம்பிக்கை அளித்தனர்.

கீர்த்தி
சாவித்ரி நடித்த படங்களை பார்த்தேன். அவரின் மகள் விஜயசாமுண்டீஸ்வரியை சந்தித்து சாவித்ரி பற்றி கேட்டு தெரிந்து கொண்டேன். சாவித்ரி ஒரு காலத்தில் ஒல்லியாக இருந்துள்ளார்.

எடை குறைப்பு
மகாநதி படத்திற்காக நான் வெயிட் போடவில்லை. பேடிங் வைத்து நடித்தேன். சொல்லப் போனால் இந்த படத்திற்காக ஒல்லியாகிவிட்டேன். தினமும் மேக்கப் போட மட்டும் 4 மணிநேரம் ஆகும். மேக்கப் போட்டுவிட்டு 7 முதல் 8 மணிநேரம் நடித்தேன். மேக்கப் போட்ட பிறகு சாப்பிட முடியாது. ஜூஸ் தான் குடிக்க முடியும்.

கஷ்டம்
மகாநதி படத்தில் நடித்து முடிக்க ஒரு வருடம் ஆனது. இந்த படத்தில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட்டேன். நான் 80 சதவீதம் சாவித்ரியாகவே மாறிவிட்டதாக படக்குழு கூறியது மகிழ்ச்சியாக இருந்தது. இந்த படத்திற்காக மட்டும் நான் 120 உடைகள் அணிந்துள்ளேன் என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

காதலனுடன் சுவாதிக்கு டும் டும் டும்

விஸ்வரூபம்-2 பட டிரைலர், இசை வெளியீட்டை பிரமாண்டமாக நடத்த திட்டம்

ரசிகர்களுக்கு முத்தம் கொடுத்து சந்தோஷத்தை வெளிப்படுத்திய பிரபல நடிகை