(UTV|COLOMBO)-இலங்கை நிர்வாக சேவை பயிற்சி தர உத்தியோகத்தர்களுக்கும் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவிற்குமிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று புதன்கிழமை பிற்கல் ஆறு மணியளவில் ஆளுனர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இவ்வுத்தியோகத்தர்களை வரவேற்ற கிழக்கு மாகாண ஆளுனர் இந்த நாட்டின் தேசிய அபிவிருத்தியிலும் பொருளாதார முன்னேற்றத்திலும் நிர்வாக சேவை அதிகாரிகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.
மேலும் அதிகார பரவலாக்கல்.மாகாண சபை நிர்வாக முறை ஆகியவற்றை தௌிவுபடுத்திய ஆளுனர் மத்திய மற்றும் மாகாண அரச நிர்வாகங்களுக்கிடையில் சுமூகமான தொடர்பு நடைமுறைகளையும் வலியுறுத்தினார்.
தேசிய நல்லிணக்க செயற்பாடுகளில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகளின் பங்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய கிழக்கு மாகாண ஆளுனர் இவ்விடயத்தில் நிர்வாக சேவை அதிகாரிகள் காத்திரமான பங்களிப்பை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார்.
பிரதம செயலாளர் ஆளுனரின் செயலளார் மற்றும் அமைச்சுக்களின்செயலாளர்களும் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.
அப்துல்சலாம் யாசீம்
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]