வகைப்படுத்தப்படாத

ஈரானில் கடுமையான நிலநடுக்கம்

(UTV|IRAN)-மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானின் தலைநகரான தெஹரானின் தென்கிழக்கு பகுதியில் சுமார் 1100 கிலோமிட்டர் தொலைவில் அமைந்துள்ள ஹோஜேடெக் நகரில் நேற்றிரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது கடல் மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது என்றும், 6.1 ரிக்டர் அளவுகோலில் பதிவானது என்றும் வானிலை ஆராய்ச்சி மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீடுகளை விட்டு வெளியே வந்த மக்கள் சாலைகளில் ஒன்றுகூடினர். தொடர்ந்து அந்த பகுதியில்  சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால், பொதுமக்கள் யாரும் வீடுகளுக்கு செல்லவில்லை. சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான சுவர்களில் விரிசல் காணப்படுகிறது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு, பொருட்சேதம் தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இந்த நிலநடுக்கத்தினால் சுமார் 42 பேர் காயமடைந்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் வீடுகளில் இருந்து வெளியே தப்பியோட முயற்சித்தபோது காயமடைந்ததாக கூறப்படுகிறது. ஏற்கனவே, ஈரானின் தென்கிழக்கு பகுதியில் கடந்த 2003-ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 26 ஆயிரம் பேர் பலியானது நினைவிருக்கலாம்.

alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

සාමය සමගිය සහ සහජීවනය සඳහා වූ ජාතික සමුළුව අද කොළඹදී

அரச வைத்திய அதிகாரிகள் மீண்டும் எச்சரிக்கை

தீப்பரவல் காரணமாக 50 ஏக்கர் நிலப்பரப்பு சேதம்