வகைப்படுத்தப்படாத

தொடரூந்து இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-முறைமைக்கு புறம்பாக தொடரூந்து இயந்திர சாரதி உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரூந்து இயந்திர சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பித்துள்ளனர்.

தொடரூந்து இயந்திர சாரதிகள் சங்கத்தின் செயலாளர் இந்திக்க தொடங்கொட  இதனைத் தெரிவித்துள்ளார்.

பணிப்புறக்கணிப்பு இடம்பெறுகின்றபோதும், சில தொடரூந்து பயண சேவைகளை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் நடத்த திட்டமிட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

குறித்த ஆட்சேர்ப்பு முறைமை தொடர்பான அறிவிப்பை மீளப் பெறுமாறு கோரியுள்ளதாகவும், ஆனால் முகாமைத்துவ தரப்பிலிருந்து அதற்கு உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையிலும், சில தொடரூந்து சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், முகாமைத்துவத்தால் உரிய தீர்வொன்று பெற்றுக்கொடுக்கப்படாவிட்டால், இன்று மாலை வேளையில் அனைத்து தொடரூந்து சேவைகளும் இரத்து செய்யப்பட உள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

அரச சேவையில் பட்டதாரிகள்

சாகல ரத்நாயக்கவின் அதிரடி தீர்மானம்

President’s fmr chief of staff & ex-STC chairman served indictments