வகைப்படுத்தப்படாத

க.பொ.த.சாதாரணதர பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகளுக்கு இன்று நள்ளிரவு முதல் தடை

(UTV|COLOMBO)-கல்வித் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புகள் போன்றவற்றை நடத்த இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையானது எதிர்வரும் 21ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, பரீட்சைகள் சார்ந்த கருத்தரங்குகள், செயலமர்வுகள், மேலதிக வகுப்புகள், மாதிரி வினாத்தாள்களை அச்சிடல், விநியோகித்தல், சுவரொட்டிகள் மற்றும் பதாதைகள் மூலம் விளம்பரப்படுத்துதல் என்பன முழுமையாக தடைசெய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, இது தொடர்பான விளம்பரங்களை ஊடகங்கள் மூலமாக வெளியிடுதல் என்பனவும் தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு மீறப்படுமாயின், அது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்துக்கோ அல்லது பரீட்சைகள் திணைக்களத்தின் 1911 என்ற இலக்கத்துக்கோ தகவல் வழங்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கோரியுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை வழங்கவும்

தாய்வானின் உயர்மட்ட வர்த்தக குழுவொன்று இலங்கைக்கு விஜயம்

சிறுமியை கற்பழித்த சித்தப்பாவுக்கு நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு!