வகைப்படுத்தப்படாத

2020-ம் ஆண்டில் கல்லீரல் நோயினால் உயிரிழப்பு அதிகரிக்கும்

(UTV|COLOMBO)-எய்ட்ஸ் மற்றும் புற்று நோய்க்கு அடுத்த படியாக இருதய நோய் உயிர்க்கொல்லி ஆக உள்ளது. இவற்றில் இருதய நோய் சாதாரணமாக பலரை தாக்கி பலி வாங்குகிறது.

இதைவிட மிகப்பெரிய உயர்க்கொல்லி நோயாக கல்லீரல் நோய் சத்தமின்றி அமைதியாக உருவாகி வருகிறது. இதை சமீபத்தில் நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது.

அதிக அளவில் மதுகுடித்தல் மற்றும் உடல்பருமன் போன்றவைகளால் கல்லீரல் நோய் உருவாகிறது என டாக்டர்கள் கூறுகின்றனர்.

2020-ம் ஆண்டில் கல்லீரல் நோயின் மூலம் ஏராளமானோர் உயிரிழக்கும் ஆபத்து உருவாகும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். அது இருதய நோயினால் ஏற்படும் உயிரிழப்புகளை விட மிக அதிகமாக இருக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் இருதய நோயினால் 76 ஆயிரம் பேர் மரணம் அடையும் பட்சத்தில் கல்லீரல் நோய் மூலம் 80 ஆயிரம் பேர் பலியாவார்கள். இதன் மூலம் கல்லீரல் நோய் உயிர்க்கொல்லியாக மாறும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

பொதுவாக கல்லீரல் நோய் இளைய மற்றும் நடுத்தர வயதினரான 40 வயதுக்குட்பட்டோரை அதிகம் பாதிக்கிறது. எனவே கல்லீரல் பாதிக்கப்படாமல் இருக்க மதுவின் விலையை ஸ்காட்லாந்து அரசு உயர்த்தியுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

Brazil’s President Bolsonaro offers US ambassador job to son

மின்சாரசபை ஊழியர்கள் இன்று பணிப்பகிஸ்கரிப்பு