வகைப்படுத்தப்படாத

பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல்

(UTV|JAFFNA)-யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டி நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஒன்றின் மீது, கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கனகராயன்குளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று இவர்கள் கைதாகியுள்ளனர்.

குறித்த பஸ் கனகராயன்குளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போதே, இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதேவேளை, இந்தத் தாக்குதலால் பஸ்ஸின் கண்ணாடிகள் சில சேதமடைந்துள்ளதோடு, பயணிகளுக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஐவரையும் வவுனியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராயன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட இளவரசர் மிதெப் பின் அப்துல்லா விடுவிப்பு

பாதாள உலகத்தவர்களை முற்றாக ஒழிப்பதற்கு ஆறுமாதகால அவகாசம்

மர்ம காய்ச்சலுக்கு பலியானோர் எண்ணிக்கை 79 ஆக உயர்வு