வகைப்படுத்தப்படாத

அஹதிய்யா மற்றும் இஸ்லாம் சமய பாடசாலைகளுக்கான பாடப்புத்தகங்கள் வெளியீடு

(UTV|COLOMBO)-முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால், அஹதிய்யா மற்றும் இஸ்லாம் சமய பாடசாலைகளுக்கான மும் மொழிகளிலும் தொகுக்கப்பட்ட 28 பாடப்புத்தகங்களின் வெளியீட்டு வைபவம் நேற்று இடம்பெற்றது.

தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் ஜாமிய்யா நளீமியா கலாபீடத்தின் பிரதிப் பணிப்பாளர் அஷ்ஷெய்க் ஏ.சி.அகார் முஹம்மத் சிறப்புரை நிகழ்த்தினார்.

தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம். நவவி, அகில இலங்கை ஜமிய்யதுல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம். மலிக் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

பிரபல இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹோக்கிங் மரணம்

கொழும்பு ஸ்ரீ ஜயவர்தன புற கோட்டை மாநகர சபை உத்தியோகபூர்வ முடிவுகள்

රාජ්‍ය ආයතනවල මූල්‍ය හා කාර්ය සාධනය ඇගයීම සම්මාන උළෙල අදයි