(UTV|COLOMBO)-நாட்டின் தென்மேற்கு திசையின் அரேபியா கடல் பிரதேசத்தில் நிலவிய தாழமுக்க நிலை தற்போது தாழ்வு நிலையை அடைந்து கொழும்பில் இருந்து 300 கிலோமீற்றர் தூரத்தில் அதாவது மேற்கு திசையாக நிலைக்கொண்டு இருப்பதாக வளிமண்டளவிளல திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது எதிர்வரும் சில மணித்தியாலங்களில் சூறாவளியாக மாறி வடமேல் திசையை நோக்கி நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தெற்கு சப்பிரகமுவ மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இட்களில் 100 க்கும் 150 இடைப்பட்ட மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
இந்த காலநிலை எதிர்வரும் 12 மணித்தயாலங்களுக்கு ஏற்புடையதாகும் என்று திணைக்கள்ம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக நாட்டின் தென்மேற்கு பிரதேசத்தில் கடும்; மழை பெய்வதுடன் கடும் காற்றும் வீசக்கூடும்.
நாட்டின் மேற்கு மற்றும் தென்மேற்கு கரையோரத்திற்கு அப்பால் ஆழ்கடல் மற்றும் ஆழ்கடல் அற்ற பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும்.
காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 90 அல்லது 100 கிலோமீற்றர் கொண்டுள்ளதாக அமைந்திருக்கும்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]