வகைப்படுத்தப்படாத

இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட பாரியளவு தங்கம் பறிமுதல்

(UTV-COLOMBO)-தமிழகம், ராமநாதபுரம் பகுதியில் உள்ள எஸ்.பி. பட்டிணம் கடற்கரைப் பிரதேசத்தில் இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட 8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த பகுதியில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து, இந்திய வருமானவரி புலனாய்வு அதிகாரிகள் மேற்கொண்ட தேடுதலின் போது இந்த கைது இடம்பெற்றது.

அவரிடம் இருந்து மீட்கப்பட்ட தங்கத்தின் பெறுமதி 2.5 கோடி இந்திய ரூபாய்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தோண்டி பகுதியில் 16 கிலோ வரையான தங்கம் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Railway strike called off [UPDATE]

பாடசாலைக்கு சென்ற 09 வயது மாணவி விபத்தில் பலி

අද (13) දිනයෙත් දිවයින පුරා වැසි