வகைப்படுத்தப்படாத

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும், ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் இடையில் இன்று முக்கிய சந்திப்பு

(UTV|COLOMBO)-எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இணைந்து போட்டியிடுவது குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் ஒன்றிணைந்த எதிர்கட்சிக்கும் இடையிலான முக்கிய சந்திப்பு ஒன்று இன்று இடம்பெறவுள்ளது.

இரண்டு கட்சிகளுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தி இறுதி முடிவுக்கு வரும் பொருட்டு அமைக்கப்பட்ட மூவரடங்கிய குழுகள், இரண்டு தரப்பின் சார்பிலும் இன்று சந்திக்கின்றன.

இதன்போது முக்கிய தீர்மானம் எட்டபடும் என தெரிவிக்கப்படடுகிறது.

ஒன்றிணைந்த அரசாங்கத்தில் இருந்து விலகுமாறு ஒன்றிணைந்த எதிர்கட்சி முன்வைத்துள்ள கோரிக்கையை தொடர்பில் இன்றைய சந்திப்பின் போது விரிவாக ஆராயப்படும் என ஒன்றிணைந்த எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Michael Jackson honoured on 10th anniversary of his death

நசீர் அஹமட்டிடம் 25 கோடி கோரினார் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்!

වියළි කාලගුණය හේතුවෙන් පුද්ගලයින් ලක්‍ෂ හයකට වැඩි පිරිසක් පිඩාවට