விளையாட்டு

இலங்கைத் தொடரில் இருந்து கோலி விலக வாய்ப்பு

(UTV|COLOMBO)-ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்கு ஓய்வளிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதன்படி, தற்போது இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள இலங்கை அணியுடனான எஞ்சிய போட்டிகளில் அவர் விளையாட மாட்டார் எனக் கூறப்படுகின்றது.

எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழுவினர் நாக்பூரில் இன்று கூடி 4 வகையான இந்திய அணியை தேர்வு செய்ய இருக்கிறார்கள்.

டெல்லியில் வருகிற 2ம் திகதி தொடங்கும் இலங்கைக்கு எதிரான கடைசி டெஸ்ட், அதைத் தொடர்ந்து நடக்கும் மூன்று ஒரு நாள் போட்டிகள் மற்றும் மூன்று 20க்கு இருபது போட்டிகள், தென்னாபிரிக்காவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றுக்கு தனித்தனியாக இந்திய அணியை தேர்வு செய்து அறிவிக்க உள்ளனர்.

இதற்கமைய, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இருந்து தொடர்ச்சியாக விளையாடி வரும் இந்திய அணியின் தலைவர் விராட் கோலிக்கு, தற்போது இடம்பெற்று வரும் இலங்கை தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்படும் என்று தெரியவந்துள்ளது.

அதனால் கடைசி டெஸ்டில் இந்திய அணியை ரஹானே வழிநடத்துவார். இதேபோல் இலங்கையுடனான ஒருநாள் மற்றும் 20க்கு இருபது போட்டிக்கு இந்திய அணியின் தலைவராக ரோகித் சர்மா செயல்படுவார் என்று தெரிகிறது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

அணி குறித்து நம்பிக்கை வெளியிட்டுள்ள ரங்கன ஹேரத்!!

ஸ்பெயின் கால்பந்து அணியின் தலைவருக்கு கொரோனா

இரண்டாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று