வகைப்படுத்தப்படாத

ஹிருனிகாவின் பாதுகாவலர்களுக்கு 2 வருட கடூழிய சிறைத்தண்டனை

(UTV|COLOMBO)-2015 ஆம் ஆண்டு தெமட்டகொட பிரதேசத்தில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று சட்டவிரோதமான முறையில் தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திரவின் ஆதரவாளர்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டனர்.

டிபென்டர் வாகனம் ஒன்றில் குறித்த இளைஞர் கடத்தப்பட்டிருந்தார்.

இந்த சம்பவத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்ட 6 பேருக்கும் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.குருசிங்கவினால் 2 வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதுடன், அதனை 12 வருடங்களாக ஒத்திவைத்து தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன் குற்றம்சாட்டப்பட்ட ஆறு பேருக்கும் தலா 32000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் , ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை ஆரம்பித்தார்

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லப் பிரேரணை மீதான விவாதம் இன்று

Fuel Pricing Committee to convene today