வகைப்படுத்தப்படாத

8 மாகாணங்களுக்கான எச்சரிக்கை

(UTV|COLOMBO)-எதிர்வரும் சில தினங்களில் நாட்டின் பல பகுதிகளிலும் மழை வீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா, மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களில் மழை பெய்வதற்கான சாத்தியகூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மாகாணங்களில் 75 முதல் 100 மில்லிமீற்றர் வரையிலான மழைவீழ்ச்சியை எதிர்பார்க்கலாம் எனவும் இந்த திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, கடற்பகுதியில் காறறின் வேகம் 70 முதல் 80 கிலோ மீற்றர் வரையிலான வேகத்தில் காணப்படும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

IGP’s FR petition to be considered on Sep. 17

ලෝක කුසලාන දැල්පන්දු ශුරතාව නවසීලන්තයට

குஜராத் மின் உற்பத்தி ஆலைக்கு எதிராக வழக்கு