வணிகம்

இலங்கைக்கு கடன் உதவி வழங்கிய ஆசிய அபிவிருத்தி வங்கி

(UTV|COLOMBO)-ஆசிய அபிவிருத்தி வங்கியுடன் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சு இரண்டு கடன் ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இதன்கீழ் 350 மில்லியன் டொலர்கள் கடனாக பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

இலங்கையில் 3400 கிலோமீற்றர் நீளமான உள்ளுர் பாதை அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காக 150 மில்லியன் டொலர்கள் பயன்படுத்தப்படும்.

மேலும் 200 மில்லியன் டொலர்கள், மன்னாரில் காற்றாலை மின்சார உற்பத்தி மையம் ஒன்றை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டத்துக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

நிதி அமைச்சின் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

நெல் கொள்வனவுக்கான விலையில் திருத்தம்

“இலங்கை – குவைத் பொருளாதார மீள் உறவு இலங்கைக்கு பாரிய நன்மைகளை தரும்” குவைத் வாழ் இலங்கையர்கள் மத்தியில் அமைச்சர் ரிஷாட் நம்பிக்கை!!

தொலைபேசி சேவை தொடர்பில் இலங்கைக்கு வரும் புதிய வசதி