வகைப்படுத்தப்படாத

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் விசேட ஒரு நாள் சேவை

(UTV|COLOMBO)-கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சைக்கு இம்முறை தோற்றவுள்ள மாணவர்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் விசேட ஒருநாள் சேவையொன்று எதிர்வரும் 25ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

பத்தரமுல்ல சுகுறுபாயவில் அமைந்துள்ள ஆட்பதிவுத்திணைக்களத்தில் அன்றை தினம் காலை 8.30 மணி முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது.

பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகளுக்காக மாத்திரம் இந்த விசேட சேவை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ள பாடசாலை விண்ணப்பதாரர்களுக்கு தேசிய அடையாள அட்டைகள் தபாலில் சேர்க்கப்பட்டு வருவதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக பாடசாலை விண்ணப்பதாரிகள் சமூகமளிக்கத் தேவையில்லை . அவர்களின் பொறுப்பாளர்களான பெற்றோர் விண்ணப்பதாரரின் தகவலை  கிராமஉத்தியோகத்தரின் மூலம் உறுதிசெய்து வழங்கப்படும் அதிகாரக்கடிதத்தை திணைக்களத்திற்கு கொண்டுவருதல் போதுமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

දිවයිනේ ප්‍රදේශ කිහිපයකට වැසි රහිත කාලගුණයක්

මත් පෙති 2952 ක් සමග පුද්ගලයෙක් අත්අඩංගුවට

கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு