வகைப்படுத்தப்படாத

நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கம்

(UTV|COLOMBO)-இவ் வருடம் ஒக்டோபர் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் நூற்றுக்கு 8.0 வீதம் வரை அதிகரித்துள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் நூற்றுக்கு 5 வீதமாக நாட்டின் பணவீக்கம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, உணவு வகைகள் சார்ந்த பணவீக்கம் நூற்றுக்கு 6.4 வீதமாகவும் உணவு வகைகள் சாராத பொருட்களின் பணவீக்கம் நூற்றுக்கு 2.4 வீதமாகவும் காணப்படுவதாக, சனத் தொகை மற்றும் புள்ளி விபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

தேங்காய், மரக்கறி, அரிசி, வாழை, சிவப்பு வெங்காயம் போன்ற உணவுப் பொருட்களின் விலை அதிகரித்தமையே, உணவு வகைகள் சார்ந்த பணவீக்கத்திற்குக் காரணம் எனவும் அந்தத் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv 
என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

Related posts

அமெரிக்காவில் 70 இடங்களில் எரிவாயு குழாய் வெடித்து தீ விபத்து

කෝටි හතක් වටිනා මුහුදු කුඩැල්ලන් තොගයක් අල්ලයි

“Youth must act responsibly with their vote” – Dilum Amunugama