(UTV|COLOMBO)-பாலா தனது பி ஸ்டூடியோஸ் மூலம் தயாரித்து இயக்கியுள்ள படம் ‘நாச்சியார்’. இப்படத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ராக்லைன் வெங்கடேஷ், காவ்யா இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இந்த படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தை வருகிற கிறிஸ்துமஸ் விடுமுறையை ஒட்டி வெளியிட படக்குழு முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ஜோதிகா டீசரின் முடிவில் ஒருவரை அறைந்துவிட்டு கெட்ட வார்த்தையில் திட்டுவது போல் அந்த டீசர் முடிந்திருக்கும். அது சர்ச்சையை கிளப்பியது. தற்போது வரை இந்த டீசரை 42 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
இதனாலேயே இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.