விளையாட்டு

365 மில்லியன் டாலர் சம்பாதிக்க போகும் குத்துச்சண்டை வீரர்

(UTV|MEXICO)-உலகின் அதிகம் சம்பாதிக்கும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் மெக்சிகோ நாட்டின் முன்னணி குத்துச்சண்டை வீரர் சால் கானலோ அல்வரேஸ் புதிய சாதனை படைத்துள்ளார்.

டாசன் என்ற விளையாட்டு ஒளிபரப்பு நிறுவனம் அடுத்த ஐந்து ஆண்டுகளில், நடக்கும் 11 போட்டிகளுக்கு அல்வரேஸுடன் இந்த 365 மில்லியன் டாலர் ஒப்பந்தத்தை போட்டுக் கொண்டுள்ளது.

இவர் ஒரு ஒளிபரப்பு நிறுவனத்துடன் போட்டுக் கொண்டுள்ள ஒப்பந்தப்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 365 மில்லியன் டாலர் சம்பாதிக்க உள்ளார்.

இந்திய மதிப்புப்படி சுமார் 2700 கோடி ரூபாய் ஆகும் என கருதப்படுகின்றது.

இதுவே விளையாட்டு உலகத்தில் அதிக மதிப்புடைய ஒப்பந்தம் என கருதப்படுகிறது.

இதன் படி ஒரு போட்டிக்கு 33 மில்லியன் (கிட்டத்தட்ட 245 கோடி ரூபாய்) சால் கானலோ அல்வரேஸ்-க்கு கிடைக்கும்.

இதை நிமிடங்களுக்கு கணக்கிடும் பட்சத்தில் ஒரு நிமிடத்திற்கு பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கும் விளையாட்டு வீரராக அல்வரேஸ் உள்ளார்.

இந்நிலையில் கால்பந்து நட்சத்திரங்கள் மெஸ்ஸி, நெய்மர் போன்றோர் 350 மில்லியன் டாலர் வரை ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

அல்வரேஸ் அவர்களை விட அதிகமான மதிப்பிற்கு ஒப்பந்தம் செய்து கொண்டு உலகத்தையே திரும்பி பார்க்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இலங்கை – இந்தியா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளுக்கான அட்டவணை வெளியீடு

மஹிந்தானந்தவின் கருத்தானது பாரதூரமானது : நாமலிடம் இருந்து Twitter பதிவு

அனைத்து தரவுகளும் என்னிடம் உள்ளது – தயாசிறி அதிரடி கருத்து